Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாஷ்மீரில் பனிச் சறுக்கு செய்யப் போன இடத்தில் பனிச்சரிவு; இருவர் பலி!

    காஷ்மீரில் பனிச் சறுக்கு செய்யப் போன இடத்தில் பனிச்சரிவு; இருவர் பலி!

    குல்மார்க் மலைப் பகுதியில் பனி சறுக்கு விளையாடச் சென்ற வெளிநாட்டு வீரர்கள் இருவர் பனிச்சரிவில் சிக்கி பலியாகினர்.

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்மார்க் மலைப்பகுதியில் பனிக்காலத்தில் பனிச் சறுக்கு விளையாட வீரர்கள் அதிகளவில் வருகைப்புரிவர். குறிப்பாக குல்மார்க் மலைப்பகுதியில் உள்ள அஃபர்வாட் சிகரம் பனிச் சறுக்கு விளையாடும் வீரர்கள் மத்தியில் புகழ் பெற்ற பகுதியாகும்.

    இப்பகுதிக்கு நேற்று வெளிநாட்டைச் சேர்ந்த பனிச் சறுக்கு வீரர்கள் 21 பேர் மூன்று குழுக்களாகவும், அவர்களுடன் வழிகாட்டியாக உள்ளூர் நபர்கள் இரண்டு பேர் என 23 பேர் சென்றனர். இவர்கள் கங்கோத்ரி மலைச் சரிவில் நின்றுக்கொண்டிருந்தபோது பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. 

    இந்த விபத்தில் வெளிநாட்டு வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், அங்கு சிக்கியிருந்த 21 நபர்களை மீட்பு படையினர் கேபிள் கார் மூலம் மீட்டனர். மேலும், இந்த விபத்து சமந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    பாம்பன் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....