Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மண்டையில் இருந்த கொண்டையை மறந்த ‘தளபதி 67’ படக்குழு; கண்டுபிடித்த ரசிகர்கள்!

    மண்டையில் இருந்த கொண்டையை மறந்த ‘தளபதி 67’ படக்குழு; கண்டுபிடித்த ரசிகர்கள்!

    கைதி திரைப்படத்திற்கும், ‘தளபதி 67’ படத்திற்கும் தொடர்பு உள்ளதாகவும், ‘தளபதி 67’ லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் சேரும் என்றும் ரசிகர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

    கடந்த இரு நாட்களாக ‘தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களையும், சினிமா துறையினரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி, த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

    தற்போது மிகுந்த கவனத்துடன் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று வருகின்றன. எந்தவித புகைப்படங்களும், படத்தின் கதை சார்ந்த தகவல்களும் வெளியில் வரா வண்ணம் படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை நிகழ்த்தி வருகிறது. 

    அதேநேரம், ‘தளபதி 67’ லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் சேருமா? சேராதா? என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இந்தக் கேள்விக்கு யாரும் பதில் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், நேற்று வெளியான பட பூஜை வீடியோவில் கைதி திரைப்படத்தில் நெப்போலியன் எனும் போலீஸாக நடித்திருந்த ஜார்ஜ் மரியம் உள்ளதை ரசிகர்கள் கவனித்து விட்டனர். 

    இதனால், கைதி திரைப்படத்திற்கும், ‘தளபதி 67’ படத்திற்கும் தொடர்பு உள்ளதாகவும், ‘தளபதி 67’ லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் சேரும் என்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    சூறாவளி ஆட்டம் ஆடிய சுப்மன் கில்; மாபெரும் வெற்றியை ருசித்த இந்தியா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....