Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசூறாவளி ஆட்டம் ஆடிய சுப்மன் கில்; மாபெரும் வெற்றியை ருசித்த இந்தியா!

    சூறாவளி ஆட்டம் ஆடிய சுப்மன் கில்; மாபெரும் வெற்றியை ருசித்த இந்தியா!

    நியூசிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது.

    இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. 

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், இஷான் கிஷன் 1 ரன்னில் பெவிலியன் திரும்பி வீரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

    இதன்பின்னர், சுப்மன் கில்லுடன் ராகுல் திரிபாதி இணைந்தார். இவற்றில் ராகுல் திரிபாதி 44 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும், ஹர்திக் பாண்டியா 30 ரன்களும் எடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

    ஒரு பக்கம் நல்ல ரன்களுடன் விக்கெட் விழுந்துக் கொண்டிருக்க, மறுபுறம் சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து பந்துவீச்சை சுப்மன் கில், கில்லியாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்து இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் 63 பந்துகளில் 126 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் இருந்தார். 

    இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க, இந்திய பந்துவீச்சாளர்கள் அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். 

    நியூசிலாந்து அணியின் வீரர்கள் அனைவரையும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் பக்கம் திருப்பினர் இந்திய அணியினர். இதன் மூலம் அந்த அணி 12.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியுள்ளது.  

    ‘குரங்கு பொம்மை’ பட இயக்குநர் இயக்கத்தில் விஜய் சேதுபதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....