Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாவது கண்டிக்கத்தக்கது - எடப்பாடி பழனிசாமி

    அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாவது கண்டிக்கத்தக்கது – எடப்பாடி பழனிசாமி

    சென்னை: அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாவது வேதனைக்குரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து;

    பள்ளி கல்வி துறையில் LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாவது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

    இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    ஒரே நபர் பல பெயர்களில் விந்தணு தானம்… கண்டுபிடித்த தம்பதியினர்கள் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....