Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு500 சில்லறை மதுபான விற்பனை கடைகள்; மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

    500 சில்லறை மதுபான விற்பனை கடைகள்; மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

    தமிழ்நாட்டில் 500 சில்லறை மதுபான விற்பனை கடைகள் மூடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    தமிழ்நாடு சட்டமன்றத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாத்தின்போது, தற்போது தமிழ்நாட்டில் இயங்கி வரும் 5,239 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் 500 கடைகள் மூடபப்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், 500 கடைகளை தேர்வு செய்வதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

    தொழில்முறை, 50 மீட்டருக்கும் உள்ள கடைகள், வருவாய் குறைந்த கடைகள், பள்ளி, கோயில்கள் அருகில் உள்ள கடைகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யபப்டும் கடைகளை மூட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஒரே நபர் பல பெயர்களில் விந்தணு தானம்… கண்டுபிடித்த தம்பதியினர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....