Friday, March 31, 2023
மேலும்
    Homeசமூக வலைதளம்சச்சின் தெண்டுல்கர் மற்றும் இஷன் கிஷான் இடம்பெற்ற அழகான காணொளி இணையத்தில் வைரல்!

    சச்சின் தெண்டுல்கர் மற்றும் இஷன் கிஷான் இடம்பெற்ற அழகான காணொளி இணையத்தில் வைரல்!

    பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில், பிரத்யேக மரியாதைத்துவமான நிகழ்வுகளில் எவரும் இல்லையென்று நாம் தனிப்பட்ட முறையில் எதையோ செய்துக்கொண்டிருக்க, தீடிரென ஆசிரியரோ, நமது மேலாளரோ, நாம் மரியாதை தரக்கூடியவரோ அங்கிருப்பது தெரிய வர தீடிரென நமது இயல்பில் ஒரு மாற்றம் நிகழுமே, அப்படியான நிகழ்வு உங்களின் நினைவுக்கூடாரத்தில் இருக்கிறதா? இக்கூற்றைப் படித்ததும் அது மேலெழும்புகிறதா? 

    autograph

    படித்தும் நினைவுக்கு வரவில்லை எனில், இதோ இங்கே சமூக வலைத்தளத்தில் தற்போது தீவிரமாய் பரவி டிரெண்ட் அடித்து வரும் ஒரு காணொளியை காணுங்கள். மேற்கூறிய நிகழ்வு உங்களின் நினைவுக்கூடாரத்தில் இருந்தால், அவை மீண்டும் தற்போது மேலெழும்பி விடும். 

    டிரெண்ட் அடித்து வரும் அந்த காணொளியில் மும்பை கிரிக்கெட் அணியின் ஓய்வறையில் நிகழ்ந்த நிகழ்வுதான் இடம்பெற்றிருக்கிறது. காணொளியின்படி, ஓய்வறையில் வீரர்கள் இருக்க, அங்கு தீடிரென வருகிறார், இஷன் கிஷான்.

    வருபவர், காதில் இயர்போன்களுடனும் , கண்களில் கண்ணாடியுடனும், கையில் கைப்பேசியுடனும் இருக்க தீடிரென அங்கு கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் அமர்ந்திருப்பதை கவனிக்க அதுவரை இருந்த இயல்பில் இருந்து மாறத்தொடங்குகிறார், இஷன் கிஷான். இது பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது.

    இந்த காட்சிகளை உள்ளடக்கிய காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    ipl

    கோலாகலமாகத் தொடங்கும் ஐபிஎல்; இன்று முதல் போட்டி!

    ஐபிஎல் தொடரின் 16-ஆவது சீசனின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது.  இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான...