Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு66 குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கிய இருமல் மருந்து தமிழகத்தில் விற்கப்படுகிறதா?

    66 குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கிய இருமல் மருந்து தமிழகத்தில் விற்கப்படுகிறதா?

    காம்பியாவில் குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கிய இருமல் மருந்து, தமிழகத்தில் விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 

    ஆப்பிரிக்காவின் காம்பியாவில் இந்திய நிறுவனமான மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் (Maiden Pharmaceuticals) தயாரித்த இருமல் மருந்து எடுத்துக்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழந்தனர்.  இந்நிலையில், தமிழகத்தில் அந்த நிறுவனத்தின் மருந்து விற்கப்படுகிறதா என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை கள ஆய்வு நடத்தியது. 

    அப்படி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், தடைசெய்யப்பட்ட நிறுவனத்தின் மருந்துகள் மற்றும் தயாரிப்புகள் தமிழகத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை என தெரியவந்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் உத்தரவின் பெயரில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

    அப்படி அந்த மருந்தில் என்ன தான் உள்ளது? 

    அந்த மருந்தில், டைதிலீன் கிளைகோல் (Diethylene glycol) என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. அதனால், கர்நாடகாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் மருந்துகளில் இந்தப் பொருள் உள்ளதா என கண்காணிக்க அனைத்து உற்பத்தியாளர்களுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க:ராமாயணத்தை தவறாக சித்தரித்ததா ஆதிபுருஷ்? படக்குழுவினருக்கு பறந்த நோட்டீஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....