Sunday, April 28, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்ஐபோன் 14 ப்ரோ இந்தியாவிற்கு வருவதில் சிக்கல் - காரணம் தெரியுமா ?

    ஐபோன் 14 ப்ரோ இந்தியாவிற்கு வருவதில் சிக்கல் – காரணம் தெரியுமா ?

    இந்தியாவில் ஐபோன் 14 ப்ரோ சந்தைக்கு வருவது சந்தேகம் தான் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    பலரின் எதிர்பார்ப்பையும் தன் வசம் வைத்துள்ள ஐபோன் 14 ப்ரோ செப்டம்பர் 7-ம் தேதி சர்வதேச சந்தைக்கு வரவுள்ளது. பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த வகை ஐபோனுக்கு உலகளவில் பலர் காத்திருக்கின்றனர். இந்தியாவிலும் குறிப்பிட்ட சதவீதத்தினர் ஐபோன் 14 ப்ரோவை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த ஐபோன் 14 இந்தியாவில் சந்தைக்கு வராது என்று தற்போது கருத்துகள் நிலவி வருகிறது. 

    இந்தியாவை பொறுத்தவரையில், சிறப்பு அனுமதிகள் இல்லாமல் செயற்கைக்கோள் ஃபோன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், ஆப்பிள் வெளியிடும் ஐபோன் 14 ப்ரோவோ வருங்காலத்தில் சாட்டிலைட் தொடர்பு அம்சம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதனால், இந்தியாவில் ஐபோன் 14 சந்தைக்கு வருவது சந்தேகம் தான் என்று தெரிவிக்கப்படுகிறது. வரவிருக்கும் ஐபோன் 14 ப்ரோ இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 59,600 என்ற விலை முதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....