Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு பதிவு!

    பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு பதிவு!

    பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கெளதம் அதானி உள்ளிட்ட சிலர் மீது ஊழல் மற்றும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ஒருவர், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

    அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட் நகரில் வசித்து வருபவர் தான் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் லோகேஷ் வய்யுறு என்பவர். இவர் அங்கு இரைப்பை குடலியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்ன குற்றசாட்டுகள் என்ற விவாதமும் எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

    மருத்துவர் லோகேஷ் வய்யுறு போட்டுள்ள அந்த மனுவில் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தொழிலதிபர் அதானி, உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் க்ளாஸ் ஷ்வாப் ஆகியோர் இந்தியாவில் பெரிய அளவில் ஊழல்கள் செய்துள்ளனர்.

    இதன் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை அமெரிக்காவிற்கு பரிமாற்றம் செய்தது மட்டுமின்றி, அரசியல் ரீதியாக எதிர் நிலையில் இருப்பவர்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்டு பல்வேறு தகவல்களையும் பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன் வாதத்தை வைத்திருந்த நிலையில், இந்த வழக்கு கடந்த மே மாதம் 24-ஆம் தேதி கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜூலை 22 அன்று அனைவருக்கும் சம்மன் அனுப்பியது. அந்த சம்மன் இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதியும், சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்வாப் என்பவருக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதியும் வந்து சேர்ந்தது. பிறகு ஆகஸ்ட் 19 அன்று சம்மன் சமர்ப்பித்ததற்கான ஆதாரத்தை மருத்துவர் வுய்யுரு நீதிமன்றத்தில் அளித்தார் .

    இதனையடுத்து கொலம்பியா நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, மருத்துவர் லோகேஷ் வய்யுருவிற்கு எதிராக ரவி பத்ரா என்ற வழக்கறிஞர் ஆஜரானார். இவரும் நியூயார்க்கில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான். இவர் வாதிடுகையில், மருத்துவர் லோகேஷிற்கு வேறு வேலை இல்லை. நேரத்தை எப்படி கழிப்பது என்று தெரியாமல் இப்படியொரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். லோகேஷ் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆவணங்களும் சமர்பிக்கவில்லை. இதெல்லாம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறியதோடு அமெரிக்காவின் நட்பு நாடு இந்தியா. இப்படிப்பட்ட சூழலில் சம்மந்தம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். மேலும் மருத்துவர் லோகேஷ் வய்யுறுவின் மனு சார்பாக ஆஜராக எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை.

    இதில் இருந்தே வழக்கின் நம்பகத்தன்மை எந்த அளவிற்கு உள்ளது என்பதை எல்லோராலும் அறிய முடியும். இது போல ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதைப் போலவே, நம்பகத்தன்மை இல்லாத இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டு தன் கருத்துக்களை முன் வைத்தார் .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....