Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகாமன்வெல்த் போட்டி; இந்தியாவுக்கு முதல் பதக்கம்

    காமன்வெல்த் போட்டி; இந்தியாவுக்கு முதல் பதக்கம்

    காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் இந்திய வீரர் சங்கேத் சர்கார் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

    2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் தொடங்கியுள்ளன. இப்போட்டிகளில் 215 வீரர், வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி கலந்து கொண்டுள்ளது.

    இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியின் முதல் நாளான நேற்று (ஜுலை 29)  இந்திய அணி எந்தப் பதக்கத்தையும் பெறவில்லை. இதைத் தொடர்ந்து, 2-ம் நாளான இன்று (ஜுலை 30)  பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் சங்கேத் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

    இந்திய வீரர் சங்கேத் சர்கார், ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் 248 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். முன்னதாக, 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 66 பதக்கங்களுடன் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    இலக்கை நோக்கிப் பாய்ந்த தோட்டாக்கள்; பதக்க மழையில் நடிகர் அஜித்குமார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....