Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனம்..! சாட்டியடி..! ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயண சுவாரஷ்யங்கள்...

    பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனம்..! சாட்டியடி..! ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயண சுவாரஷ்யங்கள்…

    ஒற்றுமை நடைபயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடும் காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

    ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முதல் ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

    தற்போது இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவைத் தொடர்ந்து தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் ராகுல் காந்தி இன்று அவர் பயணத்தை தொடர்ந்தபோது, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமான ‘திம்சா’ என்ற நடனத்தை அந்த மக்களுடன் இணைந்து ஆடினார். 

    பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர், ஆடிய நடன காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    அதேபோல் நேற்று அவர் தெலுங்கானாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான ‘பொனாலு’ என்ற பண்டிகையில் பங்கேற்று தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.  

    முன்னதாக ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் படகு போட்டி, குழந்தைகளுடன் ஓடுவது அவர்களுடன் விளையாடுவது என அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....