Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுடியரசுத் தலைவருக்கு முப்படைகள் மரியாதை

    குடியரசுத் தலைவருக்கு முப்படைகள் மரியாதை

    இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு முப்படைகளின் மரியாதையை ஏற்றார். 

    தில்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று (ஜூலை 26) காலை 10 மணி அளவில், இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்றார். இவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

    இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற திரௌபதி முர்முவுக்கு முப்படைகள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

    இந்நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....