Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'உத்தராகாண்டில் எந்நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம்' - விஞ்ஞானி எச்சரிக்கை!

    ‘உத்தராகாண்டில் எந்நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம்’ – விஞ்ஞானி எச்சரிக்கை!

    இந்திய விஞ்ஞானி ஒருவர் உத்தராகாண்டில் எந்நேரத்திலும், பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். 

    சமீப காலமாக நிலநடுக்கம் குறித்த அச்ச உணர்வுகள் மக்களிடையே அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, நிலநடுக்க மண்டலத்தில் வசிக்கும் மக்கள் அச்சப்பிடியில் உள்ளனர். 

    இந்நிலையில், இந்திய விஞ்ஞானி ஒருவர் உத்தராகாண்டில் எந்த நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம் என்று எச்சரித்து இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மேலும், இது குறித்து தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளதாவது:

    நேபாளத்தின் வடக்கு பகுதிக்கும் இமாச்சல் பிரதேசத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டு இருக்கிறது. இதன் தாக்கம் உத்தரகாண்டில் எதிரொலிக்கும். 

    இதனால் உத்தராகாண்டில் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆண்டுக்கு 5 சென்டிமீட்டர் அளவுக்கு இந்தியாவின் நிலத்தட்டுகள் நகர்ந்து வருகிறது. 

    இதனால் புவியின் மேற்பரப்பில் அளவுக்கு அதிகமான வாய்ப்பு ஏற்பட்டு பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    ‘வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை’ திட்டம் தேறியதா? இல்லையா? – வெளிவந்த பதில்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....