Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகடைகளை அகற்ற வந்த அதிகாரிகள்; மறியலில் குதித்த உரிமையாளர்கள்!

    கடைகளை அகற்ற வந்த அதிகாரிகள்; மறியலில் குதித்த உரிமையாளர்கள்!

    சென்னையில் சாலையோரக் கடைகளை அகற்ற அதிகாரிகள் முன்வந்ததால், கடை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    மெரினா பட்டினம்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அந்தக்கடைகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. 

    இந்த உத்தரவை அடுத்து அதிகாரிகள் இன்று காலை கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் களமிறங்கினர். ஆனால், இதற்கு அங்கு கடை வைத்திருப்பவர்களும், மீனவர்களும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இத்துடன், அங்கு கடை வைத்திருப்பவர்களும், மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அந்தபகுதியில் தற்போது போலீஸ் குவிக்கப்பட்டு அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ’’பல ஆண்டுகளாக இங்கு கடை வைத்துள்ளோம். ஆனால் தற்போது திட்டமிட்டு சென்னை மாநகராட்சி வேண்டுமென்று கடைகளை அப்புறப்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்கிறது’’ என சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். 

    ‘வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை’ திட்டம் தேறியதா? இல்லையா? – வெளிவந்த பதில்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....