Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை மீனவர்கள் கைது ! இந்தியக் கடல் எல்லையில் !

    இலங்கை மீனவர்கள் கைது ! இந்தியக் கடல் எல்லையில் !

    இந்திய சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்ததாக 5 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். 

    தமிழக தூத்துக்குடியில் பணியாற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய கடலோர காவல் படையின் ஐசிஜிஎஸ் என்ற கண்காணிக்க பயன்படுத்தும் கப்பலில் கன்னியாகுமரி இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது சந்தேகிக்கும் வகையில் ஒரு மீன்பிடி கப்பல் ஒன்று நின்றிருந்ததைக்  கவனித்த இந்திய கடலோரக் காவல் படையினர் அந்தப் படகைச் சுற்றி பிடித்து விசாரித்ததில் இலங்கை மீனவர்கள் என்பது தெரிந்தது.

    இலங்கையில் உள்ள முன்னகரைப் பகுதியைச் சேர்ந்த வர்ணகுல சூர்யா வொர்ப்பெட் பெர்னாண்டோ, ஜூட்சம்பத் பெர்னாண்டோ, அசங்க ஆண்டன், யுவன் பிரான்ஸ் சுனில் பிஹாரேரு, ரணில் இந்திக என்ற ஐந்து மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். srilankan fishermen

    மேலும் அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்பு கைது செய்யப்பட்ட ஐந்து பெயரையும் தூத்துக்குடியில் உள்ள தருவைக் குளம் துறைமுகத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக் குழுமத்திடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து இராமேஷ்வரத்திருக்கு விசாரிப்பதற்காக அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். 

    உறிய ஆவணங்களைச் சேமித்து நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதுவரை இந்திய நாட்டின் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து வந்தது இலங்கை கடலோர காவல் படை. இந்நிலையில் இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படைக் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....