Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசாம்சன் உண்டு, சூரிய குமார் யாதவ், தீபக் சஹார் இல்லை - முதலாவது டி20 இன்று...

    சாம்சன் உண்டு, சூரிய குமார் யாதவ், தீபக் சஹார் இல்லை – முதலாவது டி20 இன்று தொடக்கம்!

    இந்தியாவில் இலங்கை அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா இலங்கைக்கு இடையேயான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இரவு ஏழு மணி அளவில் நடைபெற உள்ளது. 

    india vs sri lanka

    மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில், இந்தியா பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தந்துள்ள நம்பிக்கையில் உற்சாகத்தில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.

    இந்திய அணியை பொறுத்தவரை, விராட் கோலிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சூரிய குமார் யாதவ் அவர்களும், தீபக் சஹார் அவர்களும் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுளள்து. மேலும், சஞ்சு சாம்சன் இப்போட்டியின் மூலம் இந்திய அணிக்கு திரும்புகிறார்.

    india vs sri lanka match today

    இந்திய அணி வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா (C), சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஹர்சல் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா

    இலங்கை அணி வீரர்கள்: பதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, கமில் மிஷார (WK), தினேஷ் சந்திமால், சரித் அசலங்கா, தசுன் ஷனக (C), சாமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரம, துஷ்மந்த சமீர, லஹிரு குமார்.

    மேற்கூறிய வீரர்களின் பட்டியல் யூகத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....