Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்போர் தொடங்கிய ரஷ்யா; பதற்றத்தில் உக்ரைன்! - உருவெடுக்கிறதா மூன்றாம் உலகப்போர்!

    போர் தொடங்கிய ரஷ்யா; பதற்றத்தில் உக்ரைன்! – உருவெடுக்கிறதா மூன்றாம் உலகப்போர்!

    உலக நாடுகளின் கண்கள் அனைத்தும் தற்போது உக்ரைன் மீதுதான் இருக்கின்றன. காரணம், உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பதற்றம். ஆம்! ரஷ்ய படைகள் உக்ரைன் மீதான தாக்குதலை ஆரம்பித்துவிட்டது. இதன் மூலம் போர் தொடங்கியதாகவே தெரிகிறது.

    army

    சமீப காலமாகவேக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பகை உறவு முறை தொடர்ந்து கொண்டிருந்தது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. மேலும், ரஷ்யா உலக நாடுகளின் மத்தியில் தன் ஆதிக்கத்தை மேல் நிறுத்த “நார்டு ஸ்ட்ரீம் 2” திட்டத்தை ஜெர்மன் உதவியுடன் ரஷ்யா துவங்கியது. இந்த திட்டத்தை  அமெரிக்கா போன்ற உலக நாடுகள் எதிர்த்தன. 

    Nordstream

     “நார்டு ஸ்ட்ரீம் 2” திட்டத்தின் மூலம் ஜெர்மனிக்கு ஸ்வீடன், பின்லாந்து, போலந்து ஆகிய நாடுகள் வழியாக எரிவாயு குழாய் சென்றடையும். இந்த எரிவாயு குழாய் மூலம் மூலம், ரஷ்யா நேரடியாக ஜெர்மனிக்கு எரிவாயு சப்ளை செய்ய முடியும். ஜெர்மனி மூலமாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு மலிவான விலையில் எரிவாயு வழங்க முடியும். இதை வைத்து ரஷ்யா, ஜெர்மனியின் பொருளாதாரம் மேம்படுவதோடு, ஐரோப்பிய கண்டத்தில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்ட முடியும். இதனை அறிந்துதான் அமெரிக்கா போன்ற உலக நாடுகள் “நார்டு ஸ்ட்ரீம் 2” திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

    war

    இப்படியான சூழ்நிலையில் தான் உக்ரைன் எல்லையை ஒட்டி ரஷ்ய படைகள் குவிக்கப்பட்ட செய்திகள் உலகம் முழுவதும் வைரல் ஆக, செயற்கைக்கோள் படங்கள் அதை உறுதிப்படுத்தின. மேலும் அமெரிக்காவின் உளவுத்துறை கூற்றுப்படி 1.90 லட்சம் வீரர்களை ரஷ்யா உக்ரைனை சுற்றி நிலை நிறுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதோடு இல்லாமல், செயற்கைக்கோள் படங்களை பொறுத்தமட்டில் அரை மணி நேரத்தில் உக்ரைனை அடையக் கூடிய வகையில் கிரிமியா எல்லையில் ரஷ்யா, போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும், தரைப்படையையும் நிலைநிறுத்தி உள்ளது. army

    இந்நிலையில், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன்  நாட்டின் தலைநகரான  கியூ மீதான தாக்குதலை ரஷ்ய படைகள் தொடங்கின.

    உக்ரைன் நாடுகளின் பல்வேறு நகரங்களில் ரஷ்யாவின் போர்த்தாக்குதளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டு மழைகள் என நிகழ்ந்துள்ளதால் மக்களிடையே பயம் பதற்றம் அதிகரித்து காணபப்டுகிறது.

    russia ukarine

    சர்வதேச நாடுகள் உக்ரைனுக்கு என்ன செய்ய்யபோகின்றன என்றும், போர் எப்போது முடிவுக்கு வரும் என்றும் கேள்விகள் உலகம் முழுவதும் உள்ள மக்களிடத்தில் எழுந்துள்ளது. மேலும் இப்போர் மூன்றாம் உலகப்போராக மாறிவிடுமோ என்ற அச்சமும் உலக மக்களிடத்தில் நிலவி வருகிறது!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....