Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்உலகம்போர் எதிரொலி, உக்ரைன் நாட்டு மக்கள் பல இடங்களில் தஞ்சம்! பிராத்திக்கும் உலக மக்கள்!

    போர் எதிரொலி, உக்ரைன் நாட்டு மக்கள் பல இடங்களில் தஞ்சம்! பிராத்திக்கும் உலக மக்கள்!

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில், தற்போது ரஷியா தனது போர் தாக்குதலை தொடங்கி உள்ளது. முதலில் உக்ரைன் தலைநகரான கீவு பகுதியில் ரஷியா குண்டுகளை ஏவி தாக்குதலை நிகழ்த்தியது. பின்பு படிப்படியாக உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது ரஷிய இராணுவப்படை.

    தொடர்ந்து இராணுவ விமானங்களும், இராணுவ படையினரும், பீரங்கிகளும் உக்ரைனின் பல பகுதிகளில் ஊடுருவ, தாக்குதல்களும் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ukraine

    நடைபெற்று வரும் தாக்குதலால் உலக மக்கள் பலரும் உக்ரைன் நாட்டு மக்களுக்காக பிராத்தித்து வருகின்றனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலால் உக்ரைன் நாட்டு மக்கள் பயந்து இருக்கின்றனர். 

    ரஷியா உக்ரைன் மீது சைபர் தாக்குதலையும் தற்போது நிகழ்த்தி வருகிறது. இதனால் பல முக்கிய இணையதளங்கள் மட்டும் அல்லாது உக்ரைன் அரசின் இணையதளங்களும் முடங்கின. 

    ukraine

    பல வகை தாக்குதல்களும் நடந்து கொண்டிருக்கும் மாத்திரத்தில் உக்ரைன் நாட்டு மக்கள் பல இடங்களில் தஞ்சம் அடைந்து வருகினறனர். முக்கியமாக சுரங்கங்கள் நோக்கி மக்கள் சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர்.  மெட்ரோ சுரங்கப்பாதையிலும் உக்ரைன் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். ukraine

    உக்ரைனில் இருந்த அந்நிய நாட்டு மக்கள் ஏற்கனவே பலர் தங்களின் சொந்த நாடுகளுக்கு அந்த அந்த நாடுகளின் உதவியுடன் சென்று விட்டனர். உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் விரைவில் முடிவடைய பல நாட்டு மக்களும் பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bombay jayashri

    பிரபல பாடகிக்கு மூளையில் ரத்தக் கசிவா? – வெளிவந்த தகவல்களால் அதிர்ச்சி..

    பிரபல பாடகி பாம்பே ஜெயஶ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய பாடகியாக திகழ்ந்து வருபவர் பாம்பே ஜெயஶ்ரீ. கர்நாடக இசைக்கலைஞரான இவர் தென்னிந்திய...