Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஜடேஜாவின் அசத்தல் பந்துவீச்சால் சுருண்ட ஆஸ்திரேலியா..

    ஜடேஜாவின் அசத்தல் பந்துவீச்சால் சுருண்ட ஆஸ்திரேலியா..

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்  முதல் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போட்டியானது தொடங்கியது. 

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, டேவிட் வார்னரும், உஸ்மான் க்வாஜாவும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கு அடுத்த வந்த மார்னஸ் மற்றும் ஸ்மித் 49, 37 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இருவரின் விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட ஜடேஜா கடந்த ஜூலைக்குப் பிறகு விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இப்போட்டியில்  ஜடேஜா ஜொலிக்க ஆரம்பிக்க, 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. 

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களும் எளிதில் பெவிலியன் பக்கம் திரும்பினர். இதனால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இந்திய அணித்தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது.  

    திடீரென சமூகவலைதள கணக்குகள் முடக்கம்; பல்லாயிரம் பேர் பாதிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....