Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா- இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி-இன்றைய நேர முடிவில்...

    இந்தியா- இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி-இன்றைய நேர முடிவில்…

    இந்தியா- இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும் மயங் அகர்வாலும் நல்ல தொடக்கத்தை தரவில்லை. லாகிரி குமரா சார்ட் பந்தை வீசி ரோஹித் ஷர்மாவின் 29 (28) விக்கெட்டை எடுத்தார். இந்நிலையில் மயங் அகர்வால் தொடர்ந்து பொறுமையாக விளையாடி வந்தார். இவர் இந்திய மைதானத்திற்கு நன்கு பழகியவர் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

    அடுத்தடுத்து மயங் அகர்வால் 33 (49), விராட் கோலி 45(76) ரன்கள் அதிகம் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.அடுத்து ஷ்ரேயஸ் ஐயரும் 24(48) மோசமாக ஆடி ஆட்டம் இழந்தார். அனும விஹாரி 58(128) என இருக்கையில் விஷ்வா பெர்னாண்டோ பௌலிங்கில் அவுட் ஆனார்.india srilanka test match

    பிறகு கூட்டணி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா கூட்டணி இலங்கை அணியால் பிரிக்க முடியா காரணம் இவர்கள் இருவரும் இடது கை பேட்ஸ் மேன்கள் என்பதால் எம்புல்டெனியாவும் இடது கை பௌலர் என்பதால் சமாளிக்க முடியவில்லை.

    இருவரும் பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.நன்றாக ஆடி வந்த ரிஷப் 80 ஆவது ஓவரில் லக்மன் பௌலிங்கில் 96 ரன்கள் எடுத்திருந்த போது கிளீன் போல்ட் ஆகி இரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தினார். பின்பு வந்த ஜடேஜாவும் 45(82) அஷ்வினும் 10(11) என்று விளையாடி வந்தனர் இந்நிலையில் முதல் நாள் டெஸ்ட் நேரம் முடிவடைந்தது.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 85 ஓவரில் 357/6 என்ற ஸ்கோரை எடுத்துள்ளது. 

    இலங்கை அணி பௌலர்கள் சுரங்கா, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, தனஞ்சய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் எம்புல்டெனியா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். சரித அசலங்கா விக்கெட் ஏதும் எடுக்காமல் உள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....