Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்நம்மையே கவர்ந்து இழுக்கும் கண்ணின் அறிவியல் உண்மைகளை இங்கே காணுங்கள்!

    நம்மையே கவர்ந்து இழுக்கும் கண்ணின் அறிவியல் உண்மைகளை இங்கே காணுங்கள்!

    நமது வாழ்வை வண்ணமயமாக மாற்றுவது நமது கண்கள் தான். இரண்டு கண்கள் இல்லையென்றால் அனைத்தும் இருள் தான். வேறுபாடுகளை அறிய முக்கியப் பங்கு வகிப்பது நமது இரண்டு கண்கள் மட்டும் தான். என்னதான் உடம்பில் உணர்ச்சிகள் இருந்தாலும் உருவத்தை அடையாளம் கண்டாலே நமது மனமும் மூளையும் அதை மிக அழகாய் பதிய வைக்கும். கீழே படித்தால் நீங்களே அசந்து விடுவீர்கள்!

    • நம் கண்கள் பத்து மில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களை வேறுபடுத்திக் காட்டக் கூடியது.
    • நாம் கற்றுக் கொள்ளும் அனைத்து விதமான விடயங்கள் அதாவது 80 சதவீதம் நாம் பார்க்கும் கண்கள் வழியாகத் தான் வருகின்றன.
    • நாம் நம் கண்களை மூடாமல் தும்ம முடியாது.
    • சராசரியாக அனைத்து மக்களும் ஒரு நிமிடத்திற்கு 12 முறைக்கும் மேல்  கண்களை சிமிட்டுக் கொண்டே இருக்கிறோம். ( இப்போது நீங்கள் கண் சிமிட்டியது உண்மை தானே! ) 
    • கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள மெழுகுவர்த்தியின் ஒளியை கூட  நம்மால் பார்க்க முடியும்.
    • ஒரு வினாடிக்கு மிகவும் மாறுபட்ட 50 வித்தியாசமான பொருள்களை நம் கண்களால் காண முடியும். iris picture
    • மூளையில் மிகவும் சிக்கலான உறுப்பு நாம் பார்க்க உதவும் கண்கள் தான்.
    • நமது கைரேகைகளைக் காட்டிலும் நமது கண்களின் உள்ளிருக்கும் கருவிழியில் மிக அதிகமான மற்றும் தனித்துவமான பண்புகள் உள்ளன.
    • நமது கண்கள் தான் நமது உடல் உறுப்புகளில் மிக வேகமாக சுருங்கும் தசைகளைக் கொண்டது.
    • ஆறில் ஒரு பங்கு மட்டுமே நமது கண்ணின் கருவிழி வெளியே தெரிகிறது.

    என்ன வியந்து விட்டீர்களா?

    கண்களின் கீழ் ஏற்படும் கருவளையத்தால் கவலையா? இப்படிச் செய்து பாருங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....