Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்தாடி சருமத்தை பாதுகாக்குமா? தாடிக்குப்பின் இப்படி ஒரு வரலாறு இருக்கிறதாம்!

    தாடி சருமத்தை பாதுகாக்குமா? தாடிக்குப்பின் இப்படி ஒரு வரலாறு இருக்கிறதாம்!

    மனித வரலாற்றை புரட்டி பார்த்தால் அதில் ஆண்களின் தாடிக்கென பிரத்யேக தகவல்களும் காரணங்களும் தாடிகள் கொண்டாடப்பட்டதும் தென்படுகின்றன. தாடி என்பது கலாச்சார ரீதியாகவும் மிக முக்கிய பங்கை அப்போதிலிருந்தே கொண்டுள்ளது. ஆண்மையின் அடையாளமாகவும் தாடி கருதப்பட்டதை வரலாற்றில் காணலாம். ஒரு ஆண் சிங்கத்தின் பிடரிமயிர் ஒரு ஆணிண் தாடியுடன் ஒப்பிடப்படுகின்றன.

    சிங்கத்தின் பிடரிமயிரானது தன் போட்டியாளர்களின் கொடிய நகங்கள் மற்றும் பற்களிலிருந்து முகத்தை பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பண்டைய காலத்தில் நிகழ்ந்த போர் சண்டைகளின் போது முக எலும்புகள் அடிக்கடி உடையுமென்றும், தாடி அவற்றின் பாதிப்பை குறைத்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    Beard

    தாடியை பற்றிய ஆய்வை மேற்கொண்ட அறிஞர்களின்படி முகதாடியில் உள்ள உரோமங்கள் ஒரு அடியின் சக்தியை சிதறடிக்ககூடிய ஆற்றலை கொண்டுள்ளது. போரின்போது ஆண்கள் தங்களுக்குள்ளே சண்டையிடும்போது முகதாடியின் பங்கு முக்கியமானதென்றும் கூறியுள்ளனர். மேலும், இக்கூற்றை ஆதரிக்கும் விதமாக மனித எலும்புக்கூடுகள் மற்றும் தசையமைப்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதை சான்றுகள் சுட்டிகாட்டுகின்றன என்கின்றனர்.

    Beard

    போரின் போது முகத்தை சேதத்திலிருந்து பாதுகாப்பதற்காக ஆண் முக வடிவங்கள் உருவாகியுள்ளது என்பதையும்  அதே காரணத்திற்காக தாடி உருவாக சாத்தியமென்றும் புதிய ஆய்வறிக்கை தெரிவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இக்கூற்றை நிறுபிக்கும் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் மனித மண்டையில், எலும்பின் கட்டமைப்பை தோராயமாக உருவாக்கும் மாதிரிகளை உருவாக்கினர். அவர்கள் எலும்புகளை செங்கற்களாக வெட்டி செம்மறித் தோலால் போர்த்தினர். ஏனெனில் “மனித சடலங்களிலிருந்து முழுமையான தாடி தோலின் மாதிரியை பெறுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை” எனவேதான் இம்முறை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    முகதாடி உரோமத்திற்கு செம்மறி ஆட்டின் தோல் சரியான ஒப்புமை இல்லையென கூறும் ஆராய்ச்சியாளர்கள் மேலும்  “எங்கள் கொள்ளை மாதிரிகளில் உள்ள நுண்குமிழிகளின் அளவு முழு தாடியின் அளவென்பது தோராயமானதுதான் , இது மற்ற உயிரினங்களுடன் முழுமையாக ஒத்துப்போக வாய்ப்பில்லை” என்றும் தெரிவிக்கின்றனர்.

    Beard

    இந்த ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் “உரோமமானது முகதசையையும் சருமத்தையும் பாதுகாக்கும் திறனுடையதென்றும்,  தன்மீது இயங்கும் கூர்மையான சக்தியின் ஆற்றலை உறிஞ்சி சிதறடிக்கினறன என்றும் அதனால் காயங்கள் ஏற்படுவதையும் அதன் வீரியத்தையும் சற்றே குறைக்க முடியும்” என்கின்றனர்.

    இந்த ஆய்வின் முடிவு அப்படியே மனிதனின் தாடிக்கு பொருந்துமேயானால் முழுதாடி வைத்திருப்பது முக சருமத்தையும், முக தசையையும் பாதுகாக்குமென்றும் காயங்களின் வீரியத்தை குறைக்குமென்றும் கூறுகின்றனர். மேலும் தாடி வலுவானது மெலிவானது மனிதருக்கு மனிதர் வேறுபடும் என்றும் அதனால் அனைவருக்கும் அது ஒரே மாதிரியான பாதுகாப்பை தரும் என்பதை கூற இயலாது என்றும் தெரிவிக்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....