Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஹாக்கி உலகக் கோப்பைத் தொடர்: வெளியேறியது இந்தியா

    ஹாக்கி உலகக் கோப்பைத் தொடர்: வெளியேறியது இந்தியா

    உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா காலிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

    இந்தியாவில், சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15-ஆவது ஆடவர்  ஹாக்கி உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதன்படியே தற்போது நடைபெற்று வருகிறது. 

    இந்தத் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், இரு அணிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு கோல்கள் அடித்தன. 

    மொத்தத்தில், இரு அணிகளும் தலா மூன்று கோல்கள் அடித்தன. இதனால் போட்டியானது டிராவில் முடிந்தது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட “ஷூட் அவுட்’ வாய்ப்பில் நியூஸிலாந்து 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது.

    இந்தத் தோல்வியின் மூலம் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது. உலகக் கோப்பை ஹாக்கி தொடரை நடத்தும் இந்திய அணியே தொடரில் இருந்து வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு; 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....