Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்என்னை விமர்சனம் செய்யுங்கள்- பாமக நிறுவனர்

    என்னை விமர்சனம் செய்யுங்கள்- பாமக நிறுவனர்

    சென்னை: தன்னை விமர்சனம் செய்யுமாறும், அவற்றை தான் ஏறுக்கொள்வதாகவும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க காலங்களில் பல்துறை அறிஞர்களை அழைத்து பொதுப்பிரச்சினைகள் குறித்து கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.   சென்னையில் சிறீலேகா விடுதி, கும்பகோணம்,  திண்டிவனம் என பல இடங்களில் இத்தகைய  கூட்டங்கள் நடக்கும்.

    அந்த  கூட்டங்களில் அப்போதைய பா.ம.க. தலைவர் பேராசிரியர் தீரன், பொதுச்செயலாளர் தலித் எழில்மலை, அறிஞர்கள் அரணமுறுவல், பெ.மணியரசன், தியாகு, சுப.வீரபாண்டியன், முருகு இராசாங்கம்,  பேராசிரியர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.

    அந்தக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே அனைவரிடமும்,’’ என்னை கடுமையாக விமர்சனம் செய்யுங்கள். எனது நிறைகளை என்னிடம் கூறாதீர்கள்.. குறைகளைக் கூறுங்கள். திருத்திக் கொள்கிறேன்” என்று கூறுவேன்.  கூட்டத்தில் பங்கேற்கும் அறிஞர்கள் பல்வேறு கருத்துகளையும், யோசனைகளையும் கூறுவார்கள். விமர்சனங்களும் முன்வைக்கப்படும்.  அவற்றை நானும் ஏற்றுக் கொள்வேன்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு; 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....