Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகொரோனாவுக்கு பிறகு தில்லி பெண்களிடையே மதுபான நுகர்வு அதிகரிப்பு

    கொரோனாவுக்கு பிறகு தில்லி பெண்களிடையே மதுபான நுகர்வு அதிகரிப்பு

    கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, தில்லி பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரித்து இருப்பதாக அரசு சாரா அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    தில்லியில் பெண்கள் மது குடித்து மதுபான கலாச்சாரத்தை அதிகரிப்பதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் மது அருந்திவிட்டு, வாகனத்தை இயக்குபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் ஒரு அரசு சாரா அமைப்பு இது தொடர்பாக ஒரு ஆய்வினை மேற்கொண்டது. 

    அப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி நாட்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பிறகு ஊரடங்கு போடப்பட்ட நிலையில், தில்லி பெண்களிடையே மதுபான நுகர்வு அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக சுமார் 5 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு 37.6% பெண்கள் கடந்த 3 ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்து உள்ளது என ஒப்புக்கொண்டனர். 

    அதேபோல், அதிகமான சில்லறை விலை கடைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சலுகைகளும் தள்ளுபடிகளும் அதிக அளவிலான மது பானங்களை வாங்குவதற்கு காரணங்கள் என 77 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். 

    மேலும் கொரோனா தொற்றுக்கு பிறகு, அவர்களிடம் ஏற்பட்ட தனிமை, கவலை, பொறுப்புகள், மன உளைச்சல் போன்றவற்றால் இந்த மதுபழக்கம் அதிகரித்து இருக்கிறது. 

    இதில் குறிப்பாக பெண்களிடையே மனஅழுத்தம் மட்டும் 45% அதிகரித்திருக்கிறது. இவர்களில் 7% பேர் தீங்கு விளைவிக்கும் வகையில் மதுவுக்கு அடிமை ஆகியிருப்பதும் தெரியவந்துள்ளது. 

    இதுமட்டுமின்றி, கொரோனா தொற்றுக்கு பிறகு, ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் இந்த மதுபழக்கம் அதிகரித்திருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிவந்துள்ளது. 

    இதையும் படிங்கதனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை; அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து.!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....