Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜார்கண்ட் மாநிலத்தில் காவல் அதிகாரி கொலை

    ஜார்கண்ட் மாநிலத்தில் காவல் அதிகாரி கொலை

    ஜார்கண்ட் மாநிலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் காவல் துணை ஆய்வாளர் மீது வாகனம் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

    ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தபுதனா பகுதியில் சந்தியா தொப்னோ என்பவர் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 19-ம் தேதி அன்று கால்நடைகளை ஏற்றி கொண்டு வாகனம் வருவதாக சந்தியா தொப்னோவுக்கு தகவல் கிடைத்தது. 

    இதனை தொடர்ந்து, சந்தியா தொப்னோ வாகன சோதனையில் ஈடுபட்டார். இந்நிலையில், சந்தேகம் எழும்பும் வகையில் குறிப்பிட்ட வாகனம் வந்தபோது, அதனை சந்தியா நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், அந்த வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை சந்தியா தொப்னோ மீது ஏற்றி விட்டு தப்பியுள்ளார். 

    இச்சம்பவத்தில், சந்தியா தொப்னோ படுகாயமடைந்தார். அதன்பிறகு உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து  மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சந்தியா தொப்னோ கொண்டு செல்லப்படடார். ஆனால், காவல் துணை ஆய்வாளர் சந்தியா தொப்னோ உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுநரை கைது செய்துவிட்டோம் என காவல்துறை கண்காணிப்பாளர் கவுஷல் கிஷோர் கடந்த 20-ம் தேதி காலை கூறினார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    முன்னதாக இதுபோன்று, ஹரியானா மாநிலத்தின் நூஹ் மாவட்ட துணை கண்கானிப்பாளர் சுரேந்திர சிங் பிஷ்னோய் மீது கடந்த 19-ம் தேதி கனரக வாகனம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    ஹரியானா: கடமையில் இருந்த காவல் கண்காணிப்பாளர் கொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....