Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இளையராஜாவின் இசை மழையில் நனையத் தயாரா?

    இளையராஜாவின் இசை மழையில் நனையத் தயாரா?

    இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் இளையராஜா பெயர் பெற்றவர்.

    சினிமாவில் திரைப்படங்களுக்கு இப்போதும் பிஸியாக இசையமைத்து வரும் இவர் தொடர்ந்து பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த பிரம்மாண்ட எக்ஸ்போவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து சென்னையிலும் ரசிகர்களை இசை மழையில் நனையவிட்டார்.

    அடுத்தப்படியாக கோவையில் இசை விருந்து படைக்க உள்ளார். வருகிற ஜூன் 2ம் தேதி, இளையராஜா தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் கோவை, கொடீசியா வளாகத்தில் மாலை 6.30 மணியளவில் ‛ராஜா’ இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

    இளையராஜா கூறுகையில், ‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

    இவருடைய இசைப்பணிகள் எண்ணில் அடங்காதவை. இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா சிறந்த இசை அமைப்பாளராக வளர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

    அப்புறம் என்ன கோவை மக்களே இளையராஜாவின் இன்னிசை மழையில் நனைய தயாரா….!

    நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை உடனே புக் செய்ய அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://insider.in/raaja-live-in-concert-coimbatore-2-june-2022/event

    இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம்; முதல் மனைவி கேட்ட கேள்வி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....