Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆஸ்கார் வாய்ப்பை தவறவிட்ட ‘இரவின் நிழல்'! இந்தியா சார்பில் தேர்வான படம் எது தெரியுமா?

    ஆஸ்கார் வாய்ப்பை தவறவிட்ட ‘இரவின் நிழல்’! இந்தியா சார்பில் தேர்வான படம் எது தெரியுமா?

    எந்த எக்ஸ்ட்ரா சிபாரிசும் தேவையில்லாமல் ஆஸ்காருக்கு இந்தியாவிலிருந்து அனுப்ப தகுதியான படங்களில் ‘லாஸ்ட் ப்ளிம் ஷோ’ திரைப்படமும் ஒன்று என பார்த்திபன் கருத்து. 

    இந்தியாவின் சார்பாக ஆண்டுதோறும் ஆஸ்கர் திரைப்பட விருதுக்கு திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இம்முறை குஜராத்தி இயக்குநர் பான் நிலன் இயக்கத்தில் உருவான ‘ஷெல்லோ ஷோ ‘ (The last film showChhello Show) திரைப்படம் 2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இது குறித்து இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

    இதையும் படிங்க: நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலையில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

    மகிழ்ச்சி! எந்த எக்ஸ்ட்ரா சிபாரிசும் தேவையில்லாமல் ஆஸ்காருக்கு இந்தியாவிலிருந்து அனுப்ப தகுதியான ஒன்றிரண்டு படங்களில் ஒன்று ‘லாஸ்ட் ப்ளிம் ஷோ’ குஜராத்தி படம். 

    ஃப்ளிமிலிருந்து டிஜிட்டல் என்ற விஞ்ஞான வளர்ச்சியில் சிக்குண்ட சில உள்ளங்களில் என்னுடையதும் ஒன்று! அதை ஒரு சிறுவனை வைத்து நம் இதயத்தை சில்லு சில்லாக உடைத்து, கடைசியில் நம்பிக்கையின் ஒளி அவன் கண் வழிய நாம் காணும்படி செய்த இயக்குனர் பான் நிலன் அவர்களுக்கு வாழ்த்துகள். திறமை எங்கிருந்தாலும் அதை உலகின் முதல் ஆளாய் திறந்த மனதோடு வரவேற்று வாழ்த்த வேண்டும்!!!

    இவ்வாறு கூறியுள்ளார். பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் ஆஸ்காருக்கு தேர்வாகதது குறிப்பிடத்தக்கது.

    பொன்னியின் செல்வனுடன் போட்டியிடப்போகும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....