Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஜீவாமிர்தம் செய்வது எப்படி? இயற்கை விவசாயத்தில் இதன் பங்கு என்ன?

    ஜீவாமிர்தம் செய்வது எப்படி? இயற்கை விவசாயத்தில் இதன் பங்கு என்ன?

    இயற்கை விவசாயத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது இந்த ஜீவாமிர்தம் எனப்படும் நீர். இயற்கையான முறையில் இதனை தயாரித்து பயிர் செய்யும்போது, பயன்படுத்தி வந்தால் நல்ல பயன்களைப் பெறலாம். சரி வாருங்கள் முதலில் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

    தேவையான பொருள்கள்: 

    1. நாட்டுமாட்டு பசுஞ்சாணம் – 10 கிலோ 
    2. நாட்டுமாட்டு கோமியம்- 5 முதல் பத்து லிட்டர்
    3. வெல்லம் (அ ) கரும்புச் சாறு – 2 கிலோ, 4 லிட்டர் 
    4. சிறு தானிய பயிர் மாவு- 2 கிலோ 
    5. தண்ணீர் – 170 முதல் 180 லிட்டர் 
    6. செயற்கை உரம் படாத வரப்பு மண்- 1 கிலோ 
    7. 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாளி

    செய்முறை: 

    • 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாளியில் 180 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நாட்டுமாட்டு பசுஞ்சாணம், நாட்டுமாட்டு கோமியம், வெல்லம், சிறு தானிய பயிர் மாவு போன்றவற்றை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். 
    • தானிய மாவினை எந்த கட்டிகளும் இல்லாமல் நன்றாக தண்ணீரில் கரையும் படி கலந்துவிட வேண்டும். 
    • பிறகு வரப்பு மண்ணை அதில் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடி வைக்க வேண்டும். 
    • இதனை மூன்று நாட்கள் நிழலில் வைத்துவிட வேண்டும். அவ்வளவு தான் ஜீவாமிர்தம் தயார். 
    • ஜீவாமிர்தத்தை ஒரு வாரம் வரை வைத்து பயிர்களுக்கு பயன்படுத்தி வரலாம். 
    • மேலும் இதை நாள் ஒன்றுக்கு மூன்று முறை கொம்பு அல்லது குச்சி வைத்து வலது புறமாக கலக்கி விட வேண்டும்.  

    ஜீவாமிர்தத்தின் பயன்கள்: 

    • ஜீவாமிர்தம் பயிர்களின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. 
    • இந்த ஜீவாமிர்தத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். 
    • இது பயிர்களுக்கு ஏதுவான நல்ல ஊட்டச்சத்தாக பயன்படுகிறது. 
    • இந்த ஜீவாமிர்தம் மண்ணில் நுண்ணுயிர் வளர்ச்சியைத் தூண்டி மண்ணிற்கு நல்ல வளத்தை கொடுக்கிறது. குறிப்பாக மண் புழுவின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் மண் மேலும் மென்மையாகவும் உதிரியாகவும் மாறும். 
    • விதையை நேர்த்தி செய்ய ஜீவாமிர்தம் மிகவும் பயன்படுகிறது. விதைகளை இந்த ஜீவாமிர்தக்கரைசலில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின்பு பயிர் செய்வதால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....