Monday, March 18, 2024
மேலும்
  Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்'விளையாட நெனச்சா உன் விதி முடிப்பானே' விஜய்க்கு ஏற்ற பாடல் - "பீஸ்ட் மோட்"...

  ‘விளையாட நெனச்சா உன் விதி முடிப்பானே’ விஜய்க்கு ஏற்ற பாடல் – “பீஸ்ட் மோட்” சிறப்பு பார்வை!

  வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி மிகப்பெரிய திருவிழாவுக்கு தயராகி வருகின்றனர், விஐய் ரசிகர்கள். ஆம்! பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் 13 ஆம் தேதியை, விஐய் ரசிகர்கள் திருவிழாவாக மாற்றப்போகிறார்கள் என்பது, பீஸ்ட் திரைப்படத்தின் முன்பதிவு வீரியத்திலேயே தெரிகிறது. 

  சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளிவந்து மிகப்பெரிய சாதனைகளை படைத்ததோடு, விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக பீஸ்ட் திரைப்படத்தின் மீது பெரிதும் நாட்டமில்லாதவர்களிடத்தில் கூட, இந்த ட்ரைலர் பீஸ்ட் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறது. 

  இந்நிலையில், இன்று பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளிவந்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலரைக் கண்ட பின்பு பலரும் எதிர்ப்பார்த்தது இரண்டுதான். ஒன்று திரைப்படத்தை, மற்றொன்று ட்ரைலரில் இடம்பெற்றுள்ள பாடல் எப்போது வெளியாகும் என்பதுதான். 

  பீஸ்ட் ட்ரைலரில், விஐய் அவர்களின் மாஸ் காட்சிகளுக்கு ஏற்றவாறு பின்னணியில் ஒலிக்கும் ‘Meaner, leaner, stronger..Can you feel the power, terror, fire?’ என்ற பாடல், ட்ரைலர் வெளியான நிமிடத்தில் இருந்து தற்போதுவரை மிகவும் பரவலாக முனுமுனுக்கப்பட்டு வருகிறது. 

  மேலும், ‘திரை தீப்பிடிக்கும் ..வெடி வெடிக்கும்..ஒருத்தன் வந்தால் படை நடுங்கும்..’ என்ற தமிழ் வரியும், தற்போது பலரால் முனுமுனுக்கப்பட்டு வருகிறது. இப்படியான வரிகளைக் கொண்ட இப்பாடலானது இன்று வெளிவந்துள்ளது.

  அனிருத் அவர்கள் இசையமைத்து பாட, விவேக் அவர்கள் வரிகளை எழுத வெளிவந்துள்ளது ‘பீஸ்ட் மோட்’ பாடல். ‘அவன் மேல் இடிக்கும் கூட்டமெல்லாம் தோல்வி மட்டும் பழகிடனும்’ என முழுக்க முழுக்க விஜய் அவர்களுக்கு ஏற்றவாறே பல வரிகள் இப்பாடலில் வைக்கப்பட்டுள்ளன. 

  பல பேரின் முகமா – நின்னு 

  விளையாடுற புலிதானே 

  விளையாட நெனச்சா 

  உன்விதி முடிப்பானே 

  சில பேரின் பெயர்தான்

  ஆளுமைப் பெறுமாமே 

  வீரன் தடமே – நீ

  காயம் வாங்குற இடமே 

  மேற்கூறிய வரியை திரைப்படத்தோடு ஒப்பீட்டு பார்த்தாலும் சரி, தனிப்பட்ட முறையில் விஜய் அவர்களின் திரை வாழ்வியலோடு வைத்துப்பார்த்தாலும் சரி, பொருந்திப்போகும். இதன் அடிப்படையில்தான் பாடலாசிரியர் விவேக் இந்த வரிகளை பாடலில் வைத்துள்ளார். விஜய் என்ற பெயரில் ஒரு ஆளுமை இருப்பதாக கூறியிருப்பது விஜயின் தற்போதைய அரசியல் பிரவேசத்திற்கும் பொருந்தும். 

  உன்னப் போலவே ஒரு ஆள

  எந்த காலமும் அடையாதே 

  இந்த பேர் புகழ் முடியாதே 

  இன்னும் ஏறுமே 

  என்கிற வரியில் இருந்து இது தனிப்பட்ட விஜயை இப்பாடல் எவ்வளவு உருவகித்திருக்கிறது என்பதை நம்மால் அறியமுடிகிறது. திரைப்படத்தில் வரும் காட்சிகளை இன்னும் மெருகேற்றும் விதமாகவே இப்பாடல் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. விவேக் அவர்கள் தளபதி விஜய்க்கு பாடல் எழுதும்பொதெல்லாம் ஏதோ ஒரு மாயத்தை நிகழ்த்தி விடுகிறார். உதாரணத்திற்கு மெர்சல், சர்கார், பிகில் என்ற படங்களின் பாடல் பட்டியல்களை கூறலாம். 

  வரிகள் எல்லாம் தீவிரமாக இருந்தாலும், அனிருத் தன் குரலால் பாடியுள்ள விதமென்பது உத்வேகம் ஊட்டுவதாகவே இருக்கிறது. இசையில் குதூகலத்தையும், சக்தியையும் ஒரு சேர தந்திருக்கிறார் என்றே கூற வேண்டும். மேலும், இப்பாடலானது பீஸ்ட் திரைப்படத்தின் பின்னணி இசையின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

  ஒன்று மட்டும் உறுதி, அனிருத் இசையில் விவேக் வரியில் விஜய் அவர்கள் இப்பாடலுக்கான காட்சிகளில் திரையரங்குகளில் வரும்போதெல்லாம் திரை தீப்பிடிக்கும் என்ற சாயல்தான நிகழப்போகிறது. 

  இதையும் படிங்க; பீஸ்ட் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் ரசிகர்கள் அதிர்ச்சி – முழு தகவல்கள் உள்ளே!

  பாடலைக்காண ; https://www.youtube.com/watch?v=KOwDgUzijCI

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....