Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'இணைப்பு மொழிதான் வேண்டுமென்றால்......' அமித்ஷாவின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த இராமதாஸ்!

    ‘இணைப்பு மொழிதான் வேண்டுமென்றால்……’ அமித்ஷாவின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த இராமதாஸ்!

    நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37 வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியவை பல மாநிலங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    அமித்ஷா அவர்கள், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

    மேலும், வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்திய மொழியில் இருக்க வேண்டும் என்றும் இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேசினார் . இவரின் இந்த பேச்சுதான், தற்போது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில்,  இந்த அதிர்ச்சிக்குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

    “மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்தி தான் இருக்க வேண்டும்; ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது என்றார். மேலும், இதன் பொருள் மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பது தான் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தி, இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காக அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல் என்றும் அதை ஏற்றுத் தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தார் என்பது வரலாறு என்ற உண்மையையும் அவர் இச்சமயத்தில் தெரிவித்தார்.  

    அதோடு, இந்தியாவின் மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்கு தான் உண்டு என்றும், அதேசமயம், மொழித் திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை என்பதால் தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம் என்ற கூற்றை முன்வைத்தார், ராமதாஸ். 

    “இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில  மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்” என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....