Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஹாக்கி உலகக் கோப்பை; இந்தியா யாருடன் மோதப்போகிறது?

    ஹாக்கி உலகக் கோப்பை; இந்தியா யாருடன் மோதப்போகிறது?

    இந்தியாவில் 15-ஆவது ஆடவர் உலகக் கோப்பைத் தொடர் இன்று முதல் நடைபெறுகின்றன. 

    இந்தியாவில், சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15-ஆவது ஆடவர்  ஹாக்கி உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இன்று ஹாக்கி உலகக் கோப்பையின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

    இன்றைய நாளில், இந்தியா-ஸ்பெயின், இங்கிலாந்து-வேல்ஸ், ஆஸ்திரேலியா – பிரான்ஸ், அர்ஜென்டினா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இவற்றுள், அர்ஜென்டினா- தென்னாப்பிரிக்கா அணி மோதும் ஆட்டமானது புவனேசுவரத்தில் நண்பகல் 1 மணிக்கும், இதே மைதானத்தில் ஆஸ்திரேலியா – பிரான்ஸ் ஆட்டம் 3 மணிக்கும் நடைபெறவுள்ளது.  இங்கிலாந்து – வேல்ஸ் ஆட்டம் 5 மணிக்கு ரூர்கேலாவிலும் நடைபெறவுள்ளது. 

    மேலும், இந்தியா மற்றும் ஸ்பெயின் மோதும் ஆட்டம், உலகின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமான ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 

    இரு அணிகளும் இதுவரை 30 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், இந்தியா 13 ஆட்டங்களிலும், ஸ்பெயின் 11 ஆட்டங்களிலும் வென்றிருக்கின்றன. 6 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.

    இந்தியா vs இலங்கை: தடுமாறிய இந்திய அணிக்கு கைக்கொடுத்த கே.எல்.ராகுல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....