Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - மின் கட்டண உயர்வுக்கு அண்ணாமலை பதிலடி

    மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – மின் கட்டண உயர்வுக்கு அண்ணாமலை பதிலடி

    தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மின் கட்டண உயர்வு, தேர்தலில் திமுகவுக்கு பெரிய அடியாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்ச்சித்துள்ளார்.

    சென்னையில் தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் நீட் தேர்வு குறித்து பேசினார். அப்போது நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு மிகவும் நல்வழி காட்டக் கூடிய ஒன்று. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் இருந்து நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரக்கூடிய ஒன்று.

    தமிழ்நாட்டில் ஆரம்ப காலங்களில் நீட் தேர்வால் பிரச்னை இருந்தது என்னவோ உண்மை தான். காரணம், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பாடத்திட்டத்திற்கும், நீட் தேர்வுக்கு தயாராவதற்கான பாடத்திட்டத்திற்கும் பல வித்தியாசங்கள் இருந்தன.

    தற்போது பாடத்திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டபின், மாணவர்கள் நீட் தேர்வுக்கு மகிழ்ச்சியாகவே தயாராகி வருகின்றனர். நீட் விஷயத்தில் மாணவர்களை தவறாக வழி நடத்தி தற்கொலைக்கு தூண்டும் செயலையும், ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதையும் திமுக அரசு உடனே நிறுத்த வேண்டும். மாணவர்களின் தற்கொலைக்கு அவர்கள் மட்டுமே காரணம்.

    நீட் தேர்வை வேறு எந்த மாநிலங்களும் எதிர்க்காத நிலையில், தமிழகத்தில் மட்டும் ஆளும் திமுக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன் மூலம் அரசியல் ஆதாயமும் தேடி வருகிறது. தமிழக அரசு தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    டீ கடையில் வேலை பார்க்கும் தர்மராஜ் என்ற தொழிலாளி ஒருவரின் மகளான அகிலாண்டேஸ்வரி என்பவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, அவருக்கான எதிர்கால கல்வி செலவுக்கு ஆகும் மொத்தத்தையும் பாஜகவே ஏற்கும் என்று பேசி முடித்தார்.

    இதனையடுத்து தமிழகத்தில் இன்று அமலாக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை அவர்கள் ,இன்று தமிழகத்திற்கு கருப்பு நாள். மின் கட்டண விலை உயர்வு மக்களை வேதனை படுத்தக்கூடிய ஒன்று. திமுகவின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

    இது தேர்தலில் திமுகவுக்கு பெரிய பாதிப்பை, பின்னடைவை உண்டாக்கும் என்று கூறியதோடு, ராகுல் காந்தி அவர்களின் பாரத் ஜோடா யாத்திரை குறித்தும் விமரிசிக்க தவறவில்லை. ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் தேச ஒற்றுமைக்கான இந்த பயணம் என்பது மக்களை இணைப்பதா அல்லது பிரிப்பதா என்பது தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பேசி முடித்தார் .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....