Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோயில் திருவிழாக்களில் உயர்நீதிமன்றம் புதிய அனுமதி!

    கோயில் திருவிழாக்களில் உயர்நீதிமன்றம் புதிய அனுமதி!

    ‘கிராமங்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை’ என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழாவுக்கு அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சீனு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

    இந்த வழக்கானது நீதி பாதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

    கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. கோயில் திருவிழாக்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருந்தாலோ, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதுமானது என வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார். 

    மேலும், இந்த வழக்கில் கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். 

    இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து; காரணம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....