Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்'என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்' இணையத்தில் வைரலாகும் நண்பனின் க்யூட் பரிசு!

    ‘என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்’ இணையத்தில் வைரலாகும் நண்பனின் க்யூட் பரிசு!

    சிறுவர்களின் திறமையும், முயற்சிகளும், புதுவித யோசனைகளும் பல பொழுதுகளில் மற்றவர்களை ஈர்க்ககூடிய வகையிலேயே இருந்துள்ளன. இதுமட்டுமல்லாது, பலரும் ஏங்கும் உறவாக இருப்பது சிறுவர்களுக்கிடையேயான நட்பு. அந்த நட்பில் சுயநலம் மிகவும் குறைவாக இருக்கும். சிறுவர்கள் தனது நண்பணை, நண்பியை உத்வேகம் ஊட்டும் செயல்களில் ஈடுபடுவது அழகான ஒரு செயலாகும். 

    இந்நிலையில், தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு கட்டையில் சிறுவன் ஒருவன் தனது நண்பன் யூடியூபில் 100 சந்தாதர்களை அடைந்தமைக்காக சிறுவர்களுக்கே உரிய பாணியில் வண்ணம் தீட்டி வார்த்தைகள் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளது அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 

    இந்த புகைப்படத்தை யூடியூபில் 100 சந்தாதர்களை  அடைந்த சிறுவனின் தந்தை தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவினூடே ‘தனது மகன்  யூடியூபில் 100 சந்தாதர்களை  அடைந்ததற்காக அவனது நண்பன் இதை பரிசளித்துள்ளான்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

    இந்த இணையதள பதிவை பலரும் பகிர்ந்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்புகைப்படம் ‘க்யூட்’ ஆக இருப்பதாக பின்னூட்டம் அளித்து வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....