Sunday, April 28, 2024
மேலும்
    Homeவாழ்வியல்இந்த நுட்பங்கள நீங்க தெரிஞ்சிக்கிட்டா....சமையலில் நீங்கதான் மாஸ்!

    இந்த நுட்பங்கள நீங்க தெரிஞ்சிக்கிட்டா….சமையலில் நீங்கதான் மாஸ்!

    நுட்பங்கள்;

    1. உளுந்த வடை செய்யும் பொழுது உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்தால் போதும், சுலபமாக செய்து விடலாம். ஆனால் அதுவே மசால் வடை செய்ய வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற விட வேண்டும். அதற்கு பதிலாக கடலைப்பருப்பை நன்கு அலசிக் கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்தால் முக்கால் மணி நேரத்திலேயே நன்கு ஊறி விடும் அதன் பிறகு வடை செய்தால் நன்றாக வரும்.

    2. சமைப்பதற்க்கு 1/2 மணி நேரம் முன்னதாக அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.

    3. ஃப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும். முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.

    4. தேங்காயை அதன் ஓட்டிலிருந்து இருந்து பிரித்தெடுக்க பலரும் அவதிப்படுவார்கள். அது போன்றவர்கள் அரை மூடி தேங்காயை மூடியுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு ஓட்டை கொஞ்ச நேரம் நெருப்பில் வைத்திருந்தால் போதும். எல்லா பக்கமும் நெருப்பு படும்படி இரண்டு நிமிடம் திருப்பி விடுங்கள். ஓடு தனியாகவும், தேங்காய் தனியாகவும் எடுக்க சுலபமாக இருக்கும்.

    வழுவழுப்பு வேண்டாம்..

    5. முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் 2 சொட்டு வினிகர் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் இருக்கும். இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும். சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.

    6. அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும். பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும். தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.

    7. வெண்டைக்காயை பொடிதாக நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் வைத்து பின்னர் பொரியல் செய்தால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி விடும். சாப்பிடுவதற்கும் மொறு மொறுவென்று இருக்கும். தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும். துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.

    8. பூண்டின் தோலை சுலபமாக உரிக்க அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை ஆப் பண்ணி விட்டு தேவையான பூண்டு பற்களை போட்டு கிளறி மூடி வைத்து விடவும். 10 நிமிடம் ஆனதும் எடுத்து உரித்தால் சுலபமாக தோல் வந்து விடும். துவரம்பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

    9. வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது. பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமை கஞ்சி உண்டு வந்தால், மாதவிலக்கு ஒழுங்காக நடைபெறும். காய்கறிகளை நறுக்கிய உடனே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.

    10. ரவா தோசை சுடும் போது மாவில் இரண்டு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நல்ல மொறுகலாக வரும். தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைக் கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு ஊற்றினால் தோசை நன்றாக விரிந்து வரும்.

    சிவகார்த்திகேயனின் அடுத்தப்பட அப்டேட் இதோ! ரசிகர்களுக்கு குதூகலம்தான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....