Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தன் வெற்றிப்பாதைக்கு மீண்டும் திரும்புவாரா இயக்குநர் சங்கர்? - பிறந்தநாள் ஸ்பெஷல்!

    தன் வெற்றிப்பாதைக்கு மீண்டும் திரும்புவாரா இயக்குநர் சங்கர்? – பிறந்தநாள் ஸ்பெஷல்!

    1993-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி அர்ஜூன் நடிப்பில்  ஒரு திரைப்படம் வெளியாகிறது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இத்திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பாடல்கள் படத்தின் மீதான நம்பிக்கைக்கு அடித்தளம் போட, திரைப்பட பிரியர்கள் ஜென்டில்மேனை காண திரையரங்களுக்குள் நுழைந்தனர். திரையரங்குகளுக்குள் நுழைந்தவர்கள் திரைப்படம் முடிந்து வெளிவரும்போது, யார் இந்த திரைப்படத்தின் இயக்குநர்? இப்படியொரு அசரவைக்கும் படத்தை எடுத்த அந்த இயக்குநர் யார் என்ற கேள்வி அன்று பலருக்கும் எழும்ப அதற்கு பதிலாக கிடைத்த பெயர்தான் சங்கர். அந்த திரைப்படம் ஜென்டில்மேன்.

    திருடன்-போலீஸ், கல்வியும் வியாபரமும், காதல், அன்பு, ஆக்‌ஷன், என நகர்ந்த கதை பலரையும் வியக்க செய்ய, மற்றொருபுரம் ஜென்டில்மேன் கவரப்பட்ட விதம் பலரையும் கவர்ந்திழுத்தது. தனது வெற்றிப்படிக்கட்டுகளின் முதல் படிகட்டை  ஜென்டில்மேன் வாயிலாக அமைத்தார், சங்கர். 

    தனது முதல் திரைப்படத்தின் மூலமே திரைப்பட ரசிகர்களை மட்டுமல்லாது, திமிழ் திரையுலகையே கவனிக்கச்செய்தார், சங்கர். அதே சமயம் ஜென்டில்மேன் போல் திரைப்படம் தந்த ஒரு இயக்குநர் அடுத்து என்ன மாதிரியான திரைப்படம் எடுக்கப்போகிறார் என்ற கேள்விகள் பலமாக எழுந்தது. அந்த கேள்விக்கு தனது ‘காதலன்’ திரைப்படம் மூலம் பதிலைத் தந்தார் சங்கர். 

    ஜென்டில்மேன் எனும் ஆழமான கதைக்களத்தில் இருந்து காதலன் பெரிய வித்தியாசத்துடன் 1994-ஆம் ஆண்டு வெளியானது. இளைஞர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் பாடல்கள் காட்சி செய்யப்பட்ட விதம் திரைப்படம் பிடிக்காதவர்களையும் வியக்க வைத்தது. ஒவ்வொரு பாடலிலும் புதுமையை காட்டினார், சங்கர். இதுமட்டுமல்லாது, காதலன் திரைப்படத்தில் பலரையும் தன்பக்கம் ஈர்த்த பேட்டை ராப் பாடலுக்கு வரிகளும் எழுதி அசத்தினார். 

    என்னைக் கண்டு நீங்கள் வியந்தபடியேதான் இருக்க வேண்டும் என்று சங்கர் சபதம் ஏதும் எடுத்தாரா என்று தெரியவில்லை. தொடர்ந்து சங்கர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வண்ணமே இருந்தார். காதலன் திரைப்படத்துக்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனுடன் இவர் இணைவதாக அறிவிப்பு வர ஏற்கனவே வியப்பில் இருந்தவர்கள் மேலும் வியப்புக்குள்ளானார்கள்.

    கமல்ஹாசன் மற்றும் சங்கர் இணைந்த திரைப்படம் இந்தியன் என்ற பெயரில் வெளியாகி பட்டித்தொட்டியெல்லாம் நற்பெயரை சம்பாதித்தது. ‘லஞ்சமும், ஊழலும் இந்தியாவுக்குப் பிடித்த பிணி’ என்பதையும், நேர்மை என்றால் என்ன என்பதையும் சேனாதிபதி எனும் இந்தியன் தாத்தா கதாப்பாத்திரம் மூலம் சிறப்பாக சங்கர் விளக்கியிருப்பார். ஜென்டில்மேன் போன்ற கதைக்களத்தைக் கொண்டதாகவே இத்திரைப்படமும் இருந்தது. சுதந்திரத்தைச் சார்ந்து இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்கசெய்தது. 

    பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ஜீன்ஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் காதலன் போன்ற கலகலப்பான திரைப்படத்தை சங்கர் இயக்கினார். ஜீன்ஸ் திரைப்படம் பாடலில் மட்டுமல்ல கதையினுள்ளும் பல அதிசயங்களை நிகழ்த்தியது.  அதிசயங்களையும் பாடலில் கண்டு வியக்கும் அதே சமயம், பிரசாந்த் மற்றும் நாசரின் இரு வேடங்கள், ஐஸ்வர்யாவின் இரு வேட காட்சிகள் என பார்ப்போருக்கு புதுவித திரையனுபவத்தை ஜீன்ஸ் திரைப்படம் தந்தது. தொடர்ந்து தனது பட பாடல்களில் புதுமையை புகுத்தி வந்த சங்கர் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றில் கிராபிக்ஸ் மூலம் ரகளை செய்திருப்பார். 

    ஒரு கலகலப்பான திரைப்படம், பின்பு ஒரு சீரியஸான திரைப்படம் என்று  பயணித்துக் கொண்டிருந்த சங்கர் ஜூன்ஸ் திரைப்படத்துக்குப் பிறகு முதல்வன் எனும் சீரியஸான கதைக்களம் கொண்ட திரைப்படத்தை தன் கையிலெடுத்தார். முதல்வன் திரைப்படத்தின் கதை நகர்வு ‘திரை தீப்பிடிக்கும்’ என்ற வசனத்துக்கு அருமையாக பொருந்திப்போகும். முதல்வன் திரைப்படம் இந்தியில் நாயக் என்ற பெயரில் ரீமேக் ஆக, அதையும் சங்கரே இயக்கி இந்திய திரையுலகில் தன்னை நிரூபணம் செய்தார். 

    இளைஞர்களுக்காக இளைஞர்களை மையமாகக் கொண்டு பாய்ஸ் எனும் திரைப்படத்தை சங்கர் இயக்கினார். இத்திரைப்படமும் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்தது. கலகலவென நகர்ந்தாலும் படத்தில் பல உருக வைக்கும் காட்சிகளை சங்கர் நிகழ்த்தியிருப்பார். இத்திரைப்படத்துக்குப் பிறகு தமிழ்த் திரையுலகம் அதுவரை ‘கண்டிராத மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்நியன் மூலம் இவர் ரசிகர்களை மிரளச் செய்தார். சமூகசீர்கேடுகள் சிலவற்றை இத்திரைப்படத்தில் சங்கர் காண்பித்திருக்கும் விதம் மக்களை எளிதில் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டது. 

    இதன்பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிவாஜி மற்றும் எந்திரன் என இரு மாபெரும் வெற்றித்திரைப்படத்தை தமிழ் திரையுலகத்துக்கு சங்கர் தந்தார். சிவாஜி ரசிகர்களை கொண்டாடச் செய்ய, எந்திரன் இந்திய திரையுலகத்தை வாவ் சொல்ல வைத்தது. எந்திரன் இந்திய ரசிகர்களுக்கு கொடுத்த திரையனுபவம் என்பது சொல்லில் அடங்காதவை. இப்படியான திரைப்படங்களை தந்த சங்கர் முதல் முறையாக 3 இடியட்ஸ் எனும் இந்தி திரைப்படத்தை, தமிழில் நண்பன் என்ற பெயரில், நடிகர் விஜய்யை வைத்து ரீமேக் செய்ய அதுவும் ரசிகர்களை கவர்ந்தது. 

    இப்படி தொடர் ஹீட் படங்களை கொடுத்த சங்கர் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த ‘ஐ’ மற்றும் 2.ஓ வசூலில் சாதித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும்,  2.ஓ திரைப்படத்தின் மூலம் தொழில்நுட்ப ரீதியாக பல்வெறு முன்னெடுப்புகளை சங்கர் மேற்கொள்ள அவை அனைத்துமே ரசிகர்களாலும், திரையுலகினராலும் பாரட்டப்பட்டது. 

    தற்போது, ராம்சரன் நடிக்கும் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கி தனது வெற்றிப்பாதைக்கு மீண்டும் திரும்ப பயணித்துக்கொண்டிருக்கும் இயக்குநர் சங்கருக்கு இன்று பிறந்த நாள்!

    நடிகர் விஜய்யிடம் இருந்து அபராதம் வசூலிக்க இடைக்கால தடை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....