Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஒக்கேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி!

    ஒக்கேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி!

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒக்கேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது 

    கர்நாடக அணைகளில் கடந்த சில வாரங்களாகவே அதிக நீர்வரத்து காணப்பட்டது. பருவ மழை குறைந்ததால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

    இதன் காரணமாக, இன்று (ஆகஸ்ட் 17) புதன்கிழமை காலை நிலவரப்படி, ஒக்கேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. 

    அதிக நீர்வரத்தின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீரில் மூழ்கி இருந்த பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் தற்போது வெளியே தெரிகின்றன. 

    மேலும், ஒக்கேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒக்கேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒக்கேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க 38-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா தொற்று

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....