Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரியில் வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

    புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

    புதுச்சேரியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை காரணாமாக புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய்யம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது.
    இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் மழை ஆரம்பித்துள்ளது.

    சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி உப்பளம் , கடற்கரை சாலை, காமராஜ் நகர், கோரிமேடு உள்ளிட்ட நகர பகுதிகளிலும், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், ஊசுடு உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது.

    கனமழையால் புஸ்சி வீதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
    இதன் காரணமாக இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்கவசூலா ? செருப்பா ? திமுக வட்ட செயலாளர் – விசிக கவுன்சிலர் மோதல்! மக்கள் பணியிலும் மல்லுக்கட்டு

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....