Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமராட்டியத்தில் ரயில் விபத்து; 50-க்கும் மேற்பட்டோர் காயம்..

    மராட்டியத்தில் ரயில் விபத்து; 50-க்கும் மேற்பட்டோர் காயம்..

    மராட்டியத்தில் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி ‘பகத் கி கோத்தி’ என்ற பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மராட்டிய மாநிலம் கோண்டியா ரயில் நிலையம் அருகே இன்று (ஆகஸ்ட்-17) நள்ளிரவு 2.30 மணியளவில் சென்றபோது அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை .

    இதுவரை வெளியான தகவல்களின்படி, சிக்னல் கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், மேற்படி விசாரணை நடந்து வருகிறது.

    கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவன் பலி; தொடரும் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....