Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இளையராஜா - மணிரத்னம்; இரு பெரும் தமிழ் திரையுலக ஆளுமைகளின் பிறந்த நாள்..!!

    இளையராஜா – மணிரத்னம்; இரு பெரும் தமிழ் திரையுலக ஆளுமைகளின் பிறந்த நாள்..!!

    இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் பற்றி அறியாதவர்கள் தமிழகத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கூற வேண்டும். தங்களது தனிப்பட்ட திறைமையினாலும் தனக்கே உரிய பாணியிலும் ரசிகர்களைக் கவர்வதில் இருவருமே வல்லவர்கள்.  

    ஜூன் இரண்டாம் தேதி 1943ம் வருடம் பிறந்த இளையராஜா இந்திய இசைத்துறையில் அசைக்கமுடியாத ஒரு தூணாய் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். மேற்கத்திய இசைகளை நமக்கு நமது பாணியிலேயே அறிமுகப்படுத்திய பெருமை இளையராஜாவையே சேரும். கிட்டத்தட்ட 7,000 பாடல்களுக்கும் மேலாக இசையமைத்துள்ள இளையராஜா, 20,000 இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். 

    இதுவரை 2,000 படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, ஐந்து முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். 2012ம் ஆண்டு சங்கீத் நாடக அகாடெமி விருதினைப் பெற்றுள்ளார். 2010ம் ஆண்டு பத்ம பூஷண் விருதினையும், 2018ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதினையும் பெற்றுள்ளார்.

    1980, 90களில் தமிழ் திரையுலகின் இசை பயணத்தினை அடுத்த கட்டத்திற்குக் கூட்டிச் சென்ற இளையராஜாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது தேசமெங்கும் பல லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளம் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோபால ரத்னம் சுப்பிரமணியன் என்கிற இயற்பெயருடைய மணிரத்னம், ஜூன் இரண்டாம் தேதி 1956ம் வருடம் பிறந்தவர். கலைக்குடும்பத்தில் பிறந்த மணிரத்னம், ஆரம்பத்தில் திரைத்துறையில் விருப்பம் இல்லாமல் வளர்ந்தாலும் 1986ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம், தமிழகத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த வருடம் வெளிவந்த நாயகன் படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக நிலைநிறுத்திக்கொண்டார்.

    ரோஜா, பாம்பே, தில் சே போன்ற தொடர் வெற்றிப்படங்களை திரையுலகிற்குக் கொடுத்த மணிரத்னம், ஆறு தேசிய விருதுகளையும், நான்கு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். 2002ம் ஆண்டு இந்திய அரசானது இவருக்கு பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி சிறப்பித்தது.

    அஞ்சலி, சத்திரியன், தளபதி, திருடா திருடா, இந்திரா, ஆசை, இருவர், அலைபாயுதே, ஆயுத எழுத்து, இராவணன் போன்ற இவர் இயக்கிய  திரைப்படங்கள் இந்திய திரையுலகில் அழிக்கமுடியா இடத்தைப் பெற்றுள்ளன. தற்போது அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இரு பெரும் திரையுலக ஆளுமைகளின் பிறந்த தினம் இன்று. இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியது மட்டுமல்லாமல், அந்த படங்களின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது மட்டுமல்லாமல், சர்வதேச திரைப்படங்களுடன் தமிழ் திரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு வளர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளினைக் கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜா – மணிரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    விக்ரம் வெளியாகும் அதே நாளில் மீண்டும் வெளியாகும் கேஜிஎஃப்! – கொளுத்துங்க வெடிய…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....