Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஹன்சிகாவின் திருமண வீடியோ ஓடிடியில் - வெளிவந்த டிரைலர்!

    ஹன்சிகாவின் திருமண வீடியோ ஓடிடியில் – வெளிவந்த டிரைலர்!

    நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

    தமிழ்த் திரையுலகால் சின்ன குஷ்பூ என கொண்டாடப்பட்ட நடிகைதான், ஹன்சிகா மோத்வானி. விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக இவர் விளங்கி வந்தார். 

    இச்சூழலில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி அன்று மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை ஹன்சிகா திருமணம் செய்தார். இவர்களது திருமணம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அதே நேரம், இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இவர்களின் திருமண வீடியோ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, தற்போது திருமண வீடியோவின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    காதல் மாதம்; இவையெல்லாம் அவசியமா? – இன்றைய ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....