Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!

    குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!

    குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் நள்ளிரவு 12.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. 

    மேலும், இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக, கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் 21,000-த்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடும்பனிக்கு நடுவிலும் மீட்பு பணி தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், பலி எண்ணிக்கை 25,000-த்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. துருக்கிக்கு மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவிலிருந்து 100 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிரியாவிற்கு மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    இந்தியா vs ஆஸ்திரேலியா: முன்னிலையில் இந்தியா.. இரண்டாம் இன்னிங்ஸ் தொடக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....