Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெகு விமர்சையாக நடைபெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தெப்பத் தேரோட்டம்

    வெகு விமர்சையாக நடைபெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தெப்பத் தேரோட்டம்

    சேலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் தெப்பத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

    சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் சிற்பக்கலைகளுக்கு வரலாற்று புகழ்பெற்ற தலமாக கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு இருக்கும் சிங்கத்தின் வாயில் உருளும் கல், ராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை கட்டாயம் காணக்கூடியவை.

    இந்நிலையில் இந்த ஆண்டு கோயிலில் தெப்பத் தேர் விழா நடைபெற்றது. கைலாசநாதர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்து தெப்பக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. 

    அப்போது இந்த விழாவில் பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் சுவாமியை வணங்கி வழிபாடு செய்தனர். இந்தத் தேரோட்ட திருவிழாவினைக் காண ஓமலூர், தாரமங்கலம், கருப்பூர், காடையாம்பட்டி, ராசிபுரம், சின்னப்பம்பட்டி, மேட்டூர், நங்கவல்லி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர். 

    இந்த விழாவிற்கு துணை கண்காணிப்பாளர் சங்கீதா, ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  

    வெளியானது, ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....