Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபழிக்குப்பழி வாங்கியப் பின்பும் வீழ்ந்த லக்னோ அணி; ஷமி அபாரம்!

    பழிக்குப்பழி வாங்கியப் பின்பும் வீழ்ந்த லக்னோ அணி; ஷமி அபாரம்!

    ஐபிஎல் போட்டியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கான மோதலில்  குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சியை முகமது ஷமி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் ரசிகர்களுக்கும் கொடுத்தார். 

    முகமது ஷமி தந்த அதிர்ச்சி 

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலின் விக்கெட்டை முகமது ஷமி முதல் பந்திலேயே எடுத்தார். ஷமி தனது அடுத்த ஓவரில் மற்றொரு அதிர்ச்சியை எதிரணிக்கு வழங்கினார். குயின்டன் டி காக் விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். 

    முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டை இழந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மூன்றாவது ஓவரில் மூன்றாவது விக்கெட்டையும் இழந்தது. ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் நான்காவது ஓவரிலும் ஷமி பந்துவீச்சில் மணிஷ் பாண்டேவை லக்னோ அணி இழந்தது. 

    நான்கு ஓவரிலேயே 29 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குச் சென்றது, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். அதன்பிறகு ஜோடி சேர்ந்த தீபக் ஹூடாவும், ஆயுஷ் படோனியும் லக்னோ அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தனர். 

    தீபக் ஹூடா வெளியேறியதும், க்ருணால் பாண்டியா களம் இறங்கி, இறுதி நேரத்தில் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். ஆயுஷ் படோனி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது இருபது ஓவர்களுக்கு 158 ரன்களைக் குவித்தது.

    பழிக்குப்பழி 

    அடுத்தபடியாக, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது. பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று லக்னோ அணி துடிக்க அதற்கான பலனையும் லக்னோ அணி பெற்றது.

    முதல் ஓவரிலேயே சுப்மன் கில்லை ரன்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியனை நோக்கி திரும்பச் செய்தார், சமீரா. அதன்பிறகு வந்த விஜய் சங்கரையும் நான்கு ரன்களில் சாய்த்தார், சமீரா. மறுபுறம் கடந்த பதினோரு வருடங்களில் தனது ஐபிஎல் முதல் போட்டியை விளையாடும் மேத்யூ வேட் முப்பது ரன்கள் சேர்த்திருந்த நிலையில் தீபக் ஹூடா பந்தில் சரிந்தார்.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், டேவிட் மில்லரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். அவ்வாறாக, வெற்றியை நோக்கிச் செல்கையில் ஹர்திக் பாண்டியாவும், டேவிட் மில்லர் இருவரும் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

    அதன்பின், தடுமாறிய குஜராத் அணியை ராகுல் தெவாட்டியா தனது அதிரடி ஆட்டத்தால் வெற்றிப்பெற செய்தார். 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார், ராகுல் தெவாட்டியா. இதன்மூலம், குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....