Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை உண்டா? அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை உண்டா? அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

    கோடை விடுமுறைப்பற்றி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். 

    கடந்த இரண்டு வருடங்களாகவே கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மேலும் இணைய வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த இணைய வகுப்புகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இணைய வழி சேவை சரியாக கிடைக்காமலும் மாணவர்களின் மனநிலை மாறியும் இருந்தே வந்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் கவலையடைந்து பள்ளிகளைக் திறக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

    மேலும் அரசு சார்பில் அவ்வப்போது பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை கூட்டியும் பள்ளி திறக்கலாமா  வேண்டாமா போன்ற கேள்விகள் கொண்ட தாளில் மாணவர்கள், பெற்றோரின் கையொப்பம் பெற்று வரச் சொல்லியும் கருத்துக்களை தெரிந்துக் கொண்டனர். பின்பு உரிய பெருந்தொற்றின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறந்து நடத்த அறிவுறுத்தப்பட்டது. 

    அதன் பேரில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களும் பள்ளிக்கு சென்று படித்து வந்தனர். அனைத்து பாடங்களையும் முடிக்க முடியாது என்பதாலும் மாணவர்கள் தேர்வுக்கு படிக்க சிரமப்படுவார்கள் என்பதாலும் பாடங்கள் குறைக்கப்பட்டு தேர்வுக்கான தேதிகளை அறிவிக்கப்பட்டது. 10, 11, 12 படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை செய்முறைத் தேர்வுகளும் மே 5 முதல் மே 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மனைவியுடன் வந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர் ஒருவர் கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று கேள்வியை எழுப்பினார். 

    அதற்கு  அமைச்சர் பொய்யாமொழி, பள்ளிப் படிப்புடன் மேற்படிப்பைத்  தொடர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று கருதுகிறோம். பள்ளிகள் ஏற்கனவே தாமதமாக தொடங்கப்பட்டு இப்போது தான் தேர்வுகள் நடக்க உள்ளன மே 5 முதல் 28 வரை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். அது முடிந்த பிறகு பாடத் திட்டங்கள் முழுமையாக முடிக்க வேண்டும். எனவே  கோடை விடுமுறை பற்றி துறை அதிகாரிகளுடன் யோசித்த பிறகு தான் முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....