Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமணமகன் ஓட்டம் ; மாமனாருடன் நடந்து முடிந்த திருமணம்!

    மணமகன் ஓட்டம் ; மாமனாருடன் நடந்து முடிந்த திருமணம்!

    படித்து முடித்தவுடன், நல்ல வேலையில் சேர்ந்ததும் உடனே பிள்ளைகளுக்கு திருமணத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்பது தான் பெற்றோர்களின் எண்ணம்.

    வீட்டில் திருமணப் பேச்சு வந்தவுடனே, ஆணோ அல்லது பெண்ணோ ஏற்கனவே ஒருவரை விரும்பி இருந்தால் முன்கூட்டியே பெற்றோர்களிடம் சொல்லி விடுவது தான் நல்லது. பெற்றோர்களுக்கு நம் காதல் விவகாரம் தெரிந்தால் என்ன செய்வார்களோ என்ற பயத்தில், சொல்லாமல் விட்டுவிட்டால், பிறகு நடப்பது அனைத்தும் தவறாகவே முடியும்.

    அப்படி ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மகனின் விருப்பத்தை அறியாமல், திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்த பின்னர், திருமண நாளன்று மணமகன் தான் விரும்பிய பெண்ணோடு ஓடிவிட்டார். வேறு வழியின்றி மருமகளாக வேண்டிய மணமகளை கரம் பிடித்துள்ளார் மாமனார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் (வயது 65). இவருடைய மகனுக்கும், சுவப்ணா (வயது 21)என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருமண நாள் நெருங்கி வந்த நிலையில், தான் ஏற்கனவே காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன் ஓடி விட்டார். இதனை அறிந்த திருமண வீட்டார், அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, தனது கவுரவம் கெட்டு விடக்கூடாது என சுவப்ணாவின் தந்தை அனைவரும் திடுக்கிடும் வகையில் ஓர் அதிர்ச்சி முடிவை எடுத்தார். இதன்படி தனது மகள் சுவப்ணாவை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். தந்தையின் கவுரவத்திற்காக, மணமகளும் இதற்கு சம்மதிக்க, வேறு வழியின்றி அவரின் மாமனாரையே சுவப்ணாவும் திருமணம் செய்து கொண்டார்.

    மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தந்தைக்கு திருமணம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மகன் முன்கூட்டியே தனது காதல் விவகாரத்தை சொல்லியிருந்தால், பெற்றோர்கள் அதை ஏற்றுக்கொண்டிருந்தால் இப்போது இந்தப் பிரச்சனையே ஏற்பட்டிருக்காது.

    இனி விசா விண்ணப்ப செயல்முறை எளிமை; அமெரிக்க தூதரகம் அதிரடி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....