Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'மருத்துவ செலவுகளை பள்ளியே ஏற்க வேண்டும்' - விஜயகாந்த் கருத்து

    ‘மருத்துவ செலவுகளை பள்ளியே ஏற்க வேண்டும்’ – விஜயகாந்த் கருத்து

    பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார். 

    அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை பெற்றோர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விஜயகாந்த் தெரிவித்துள்ளதாவது, “சிறுமி கால் எலும்பு முறிவு சம்பவத்திற்கு தனியார் பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுமியின் எதிர்காலம் பாதிக்காத வகையில் மாணவியின் மருத்துவ செலவுகளை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,  பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: எச்சரிக்கையாக இருங்கள்.. உருமாறும் ஓமிக்ரானால் மீண்டும் ஒரு கொரோனா அலை; உலக சுகாதார அமைப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....