Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமின் தேவை அதிகரிப்பு; மத்திய மாநில அரசுகள் ஆலோசனை?

    மின் தேவை அதிகரிப்பு; மத்திய மாநில அரசுகள் ஆலோசனை?

    கோடைகாலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    நாட்டில் பிற பருவ நிலைகளைக் காட்டிலும், கோடைக் காலத்தில் மின் தேவை அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில் வரவுள்ள கோடைக்காலத்திலும் மின் தேவை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், மின் தேவை அதிகரிப்பைத் தொடர்ந்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய மாநில அரசுகள் ஆலாசிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    சமீபத்தில், நாட்டில் அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ‘நாட்டின் கோடைகால மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மார்ச் 16 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தங்கள் முழு உற்பத்தி திறனுடன், மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.’ என்று தெரிவிக்கப்பட்டது. 

    மேலும், டாடா பவர், அதானி மின் நிலையங்கள் உள்ளிட்ட 15 அனல் மின் நிலையங்களுக்கு இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    காந்தாரா 2-வில் ரஜினிகாந்த் – என்ன சொல்கிறார் இயக்குநர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....