Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையில் இருந்து தப்பிக்க இந்தியாவிடம் உதவி கோரினாரா கோத்தபய ராஜபக்சே?

    இலங்கையில் இருந்து தப்பிக்க இந்தியாவிடம் உதவி கோரினாரா கோத்தபய ராஜபக்சே?

    கோத்தபய ராஜபக்சே தப்பிச்செல்ல இந்தியாவின் உதவியை நாடியதாகவும், இந்தியா அதை மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இலங்கையை விட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவுக்கு செல்வதாக திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், அமெரிக்கா செல்ல விசா கேட்டு அனுப்பிய விண்ணப்பத்தை அமெரிக்க அரசு நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

    அமெரிக்க குடியுரிமையை தன்வசத்தில் வைத்திருந்த கோத்தபய ராஜபக்சே, கடந்த 2019-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை கைவிட்டார்.

    மேலும், கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு திட்டமிட்டதாக தகவல்கள் வந்தது. அந்த தகவலின்படி, இலங்கை ராணுவ விமானத்தின் வாயிலாகவும், வணிக விமானத்தின் வாயிலாகவும் கோத்தபய ராஜபக்சேவும், அவரது உதவியாளர்களும், உறவினர்களும் இந்தியாவில் தரையிரங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா இதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

    தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது. 

    ராஜிநாமா செய்து தப்பி ஓடினாரா கோத்தபய ராஜபக்சே?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....